CES 2021: MOTOROLA அறிமுகப்படுத்தும் நான்கு பட் ஜெட் போன்கள், அறிமுகம்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 11 Jan 2021
HIGHLIGHTS

Moto G Play 2021, Moto G Power CES என்ட்ரி கொடுத்துள்ளது

CES 2021யில் அறிமுகமாகும் Moto G Play 2021, Moto G Power

இன்று CES 2021 இன் தொடக்கமாகும்

CES 2021: MOTOROLA  அறிமுகப்படுத்தும் நான்கு  பட் ஜெட் போன்கள், அறிமுகம்
CES 2021: MOTOROLA அறிமுகப்படுத்தும் நான்கு பட் ஜெட் போன்கள், அறிமுகம்

Deal of the day : Realme 7 Pro available at discounted price

With 6 GB RAM and 128 GB storage and 5% off with Amazon Pay on all bank debit/credit cards

Click here to know more

Advertisements

உலகின் மிகப்பெரிய மின்னணு நிகழ்ச்சி, நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ 2021 இன்று தொடங்குகிறது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய நிகழ்ச்சிகளை வழங்க உள்ளன. மோட்டோரோலா தனது மோட்டோ ஜி மற்றும் மோட்டோரோலா ஒன் வரிசையில் நான்கு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது, இதில் மோட்டோ ஜி பிளே 2021, மோட்டோ ஜி பவர், மோட்டோ ஜி ஸ்டைலஸ் மற்றும் மோட்டோரோலா ஒன் 5 ஜி போன்கள் அடங்கும். வரவிருக்கும் இந்த போன்களை பற்றி தெரிந்து கொள்வோம் ...
 
அதன்படி மோட்டோ ஜி சீரிசில் 2021 மோட்டோ ஜி பிளே, மோட்டோ ஜி பவர், மோட்டோ ஜி ஸ்டைலஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கிறது. மோட்டோரோலா ஒன் சீரிசில் மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடல் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி பிளே 2021 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி பிளே 2021 மாடல் மிஸ்டி புளூ மற்றும் பிளாஷ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 12500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் 

மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடல் 6.7 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750 ஜி பிராசஸர், 4ஜிபி / 64 ஜிபி மெமரி மற்றும், 6 ஜிபி / 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடலிலும் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வொல்கானிக் கிரே மற்றும் பிராஸ்டெட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 29300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 2021 மோட்டோ ஜி பிவர் 

மோட்டோ ஜி பவர் 2021 மாடலில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 3ஜிபி / 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 5000எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி பவர் 2021 மாடல் குளோவிங் புளூ, போலார் சில்வர் மற்றும் பிளாஷ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை இந்திய மதிப்பில் ரூ. 14600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர், 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 மாடல் அரோரா பிளாக் மற்றும் அரோரா வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 22100 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

logo
Sakunthala

coooollllllllll

Web Title: CES 2021: Motorola launching four new budget phones
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status